Monday, May 10, 2010

நட்பு

எல்லையற்ற வானுக்கும்
ஆழமற்ற கடலுக்கும்
ஒப்பான நட்பிலே
பொறாமையும் எரிச்சலும்
வெகு வெகு தூரம்
மானிடனுக்குள்ளும் மற்றுமின்றி
சக ஜீவனுக்குள்ளும்
போகின்ற பூ
இந்த வாடாத பூ நட்பு
இந்த நட்புக்குள்ளும் பூக்கும் பூ
அன்பு..! மன்னிப்பு...!

இயற்கைளும் பல நட்பு
கதிரவன் ஒளிகண்டு
நட்பிலே சிரித்து மலரும் கமலம்
மானிடனிலே பெரிதாய்
கானமுடிந்ததும் இந்த நட்பு
…!

காதலையும் வெற்றி கொண்டது நட்பு
பேனா பிடித்தெழுதி படிக்கும் வரை
தொடக்கம் பொல்லூண்டி நடக்கும் வரை
கைகொடுப்பதும் இந்த நட்புத்தான்…!

காதல் கொண்ட உள்ளங்கள் பிரியலாம்
நட்புகொண்ட உள்ளங்கள்
பிரிவை நினைக்கக்கூடாது
கடல் கடந்து சென்றாலும் நட்பு
உள்ளத்தை விட்டுக்கடக்காது
உப்பில்லா பண்டம் குப்பைலே
நட்பில்லா நண்பனே
நடுத்தெருவிலே- இதை புரிந்திடடா
புத்தியுள்ள மனிதா....!

10 comments:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

நட்பினை பற்றிய தங்களின் கவிதையின் ஒவ்வொரு வரிகளிலும் தன்கள் மனதில் உள்ள நட்பினை நாம் அறிந்தோம் மகிழ்ந்தோம்...

நட்பிற்கு தலைவணங்குகின்றேன்...

நட்பு துடிப்பாய் இதயத்தில் இருக்கட்டும்
நட்பு சிரிப்பாய் முகத்தில் மலரட்டும்...

S.M.சபீர் said...

உயிரின் அந்தி வரை உன் நட்பு என்னோடு இருக்கும் தோழா நன்றி நண்பா

Unknown said...

நட்புப் பற்றிய கவிதையில் உங்கள் அன்பும் பூத்துள்ளது அருமை நண்பா

Tamilparks said...

மிகவும் அருமை, விரும்பினால் தமிழ்த்தோட்டத்திலும் உங்கள் கவி பூக்களை வீசுங்கள்

S.M.சபீர் said...

பாலன்ஜீ உங்கள் அருமையான பின்னுாட்டத்துக்கு நன்றி தோழரே

S.M.சபீர் said...

நண்பன் தமிழ்பார்க் அவர்களின் அருமையான பின்னுாட்டத்துக்கு நன்றி. உங்கள் அன்போடு நானும் இணைகின்றேன்

Unknown said...

நல்ல கவிதை வாழ்த்துக்கள் http://usetamil.forumotion.com/

Unknown said...

மிகவும் அருமை, விரும்பினால்தமிழர்களின் சிந்தனை களம் உங்கள் கவி பூக்களை வீசுங்கள்

Anonymous said...

soopar

S.M.சபீர் said...

நன்றி