இரவு நேரத்து பவுர்ணமி போல்
இதய தேசத்தில் நுழைந்தவளே...
ஒற்றை அன்றில் பறவை என்னை
உறவு கொடுத்து முழுமைபடுத்தியவளே...
வேஷங்கள் நிறைந்த இவ்வுலகில் எனக்கு
வெளிச்ச புள்ளியாய் வந்தவளே.
குழந்தையாய் மாறும் கடைசி காலங்களிலும்
கூடி நீ என்னோடு தவழ வேண்டும்
உன் வாய் ஒழுகும் சிறு உணவெடுத்து
உன்னோடு உண்டு நான் மகிழவேண்டும்...
இருப்பதெல்லாம் ஒன்றும் வேண்டாம்
இல்லையென்ற உன் அன்பு வேண்டும்.
என் வாழ்க்கை முடியும் வரை
என்னில் பாதியாய் இல்லை
எனக்குள் முழுமையாகவே நீ வேண்டும்...!
Friday, April 23, 2010
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
காதல் கவிதையில் அருமையாக இளைந்துள்ளது, வாழ்த்துகள் நண்பரே.
super safeer valthukkal
நன்றி நண்பா நன்றி
தொடர்ந்து வாருங்கள் பாலான்ஜீ
நன்றி மாப்ல றிபாஸ் நன்றி
Post a Comment