என்னவளே....
உன்னைக்கண்;ட நாளாய்
என்னாவி என்னில் இல்லையடி
உன் மூவெழுத்து நாமத்தில்
என் மூச்சுள்ளதென நானறிய
எத்தனை நாள்
நான் காத்திருக்கவேண்டும்
உன்னை ஓர் நிமிடம் காணாத
என் கண்களையே நான்
வெறுக்கின்றேன்
என்னைப்பார்த்து நீ சிரிக்கையிலே
ஒருகோடி இன்பமாய் நினைக்கிறேன
ஒருகனம் நீ என்னை
முந்திச்செல்லும் போது
என்னையே நான் இழக்கிறேன்
என்னவளே...
உன் புன்னகை மட்டும் போதும்
நான் பலகாலம் வாழ்ந்திடுவேன்
இவ்வையகத்தில் - அன்பே
நீ என்னுடைய முற்றத்தில் பூத்த
முதல் ரோஜாச்செடி
ஆதலால்தான் தினமும்
ஆனந்த கண்ணீராய்-தண்ணீர்
விடுகிறேன்-வாடாமலராய் நீ
தரிசனம் தருவாயா.....SA
Thursday, April 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment