விட்டுச்சென்ற
பள்ளி நாட்களை
எண்னியென்னி
நித்தமும் விடுகின்ற
என் ஏக்கபெருமூச்சுகளை
மொத்தமாய் சேர்த்தெடுத்தால்
பெரும்புயலாய்மாரி
இந்நாடே அழிந்திருக்கும்.
ஆயிரம்வருடங்கள்
அழுதுதவமிருந்தாலும்
அந்த நாட்களில்
ஒரு நிமிடம் கூட
கிடைக்கப்போவதில்லை.
ஓய்வு நேரங்களில்லை
அரட்டைவாத்தைகளால்
அலங்கரித்த நாட்களவை
எங்கள் சோகங்களை
சொல்லிச்சொல்லி
பங்கிட்டுக்கொண்ட நாட்கள்.
பாடங்களுக்கு மட்டும்
கூடிய நாட்களல்ல
பாசங்களையும்
பரிமாரிக்கொண்ட
பன்பின நாட்களது.
பாடங்களுக்கு மட்டும்
Sunday, June 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
பள்ளிக்கூடம் அனைவரின் வாழ்விலும் மறக்க முடியாத ஒன்று... அங்கு பயின்ற ஒவ்வொரு நாட்களும் மனதில் நிலைத்திருப்பவை... மற்றவர்களின் எழுத்தின் வடிவிலோ அல்லது பள்ளி பயிலும் சிறுவர்களை பார்க்கும்போதோ நெஞ்சில் நீங்காத நினைவுகளை அள்ளி தருபவை...
அருமை நண்பா... வாழ்த்துகள்
பள்ளிகூட நாட்களை மீண்டும் ஞாபகம் படுத்திவிட்டீர்கள்
Post a Comment