ஒரு சோடிக்கால்களுக்கு
பலசோடி செருப்புகளை
சேமித்த மனிதர்கள்
கால்கள் இல்லாத
மனிதர்களைசிந்தித்ததில்லை
அவசியம் தேவையானவை
செருப்பு அந்தஸ்தின் சின்னமானதால்
மனிதர்களைசுமக்கவேண்டிய செருப்பை
மனிதர்கள் சுமக்கின்றார்கள்
செருப்பு செல்வந்தர்களுக்கு செல்வாக்கு
வரியவர்களுக்கு கனவு
வியாபாரிகளுக்கு வருமானம்
பாராளுமன்றத்தின் ஆயுதம்
திருமணவீட்டில் குப்பை
பைத்தியகாரர்களுக்கு மாலை
பிச்சைக்காரர்களுக்கு தலையணை.
செருப்பு கால்களோடு மட்டும்
சம்பந்தப்பட்டதல்ல
மனித வாழ்க்கையோடு
சம்பந்தப்பட்டதும் கூட
மொத்ததில் செருப்பு
மனிதர்களைச்சுமக்கவில்லை
மனிதன் செருப்பை சுமக்கின்றான்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
செருப்பு... சிறப்பாக...வாழ்த்துகள்...
செருப்பால் அடிக்காமல்.. செருப்பை எங்கள் மீது வீசி...
Post a Comment