நந்தவனத்தேரில் |
ஒரே நாரில் தொடுத்தமலர்களாய் |
நாமிருந்த நாட்கள்.... |
நகர்ந்தது அதுவே |
நாழிகையில் தொடங்கி - பல |
நாட்களாகி இன்று அதுவே |
மாதங்கலென உருப்பொற்றுவிட்டது |
இந்த நிலையில் அந்த இனிய நாட்களை |
மீட்டபடி அஸ்தமனதிலும் |
உதயத்தை கானுகின்றேன்..! |
சந்திப்புகளைப்போலவே |
பிரிவுகளும் தற்காலிகமானவை |
நினைவுகளே நிரந்தரமானவை! |
Tuesday, September 28, 2010
பள்ளி வாழ்க்கை...!
நெஞ்சிருக்கும் வரை..!
எண்ணத்தில் நிறைந்த காதலியும் நீயே |
என் மனக்கண்களில் தெரியும் |
உருவமும் நீயே |
என்னுள்ளத்தல் பிரகாசிக்கும் |
திங்களும் நீயே |
உன்னை தங்கத்தில் படைத்தானோ இறைவன் |
உன் நெஞ்சத்தில் என்னை |
குடி கொள்ள வைத்தானே அந்த இறைவன் |
அருகினில் இருந்து அன்றில்கள் |
போல வாழ்ந்ததும் இல்லை |
பிரிவினில் இருந்தும் |
உறவினை வளர்த்து |
உயிர் பெறச்சொய்வோம் |
நம் காதலை நெஞ்சிருக்கும் வரை |
உன்னை மட்டும் புஜித்துக்கொண்டு |
உன்னுடன் வாழ்த்திடுவேன் கண்னே...! |
மனதை அடைந்து விடு
ஒரே நேரத்தில் நினைப்பதை விட |
உன் ஆயுள் முடியும் வரை |
ஒருவரை நினைத்திருப்பது மேல் |
அழகைப்பார்த்து மயங்கி விடாதே |
அதில் ஆபத்து நிறைந்திருக்கும் |
மனமுள்ளவனை மனதுக்குள் நினைத்திரு |
மற்றவை மண்துாசிபோன்றது |
மௌனம் காக்காதே மரணித்துவிடுவாய் |
கேள்வியின் நாயகியே |
மணம் உள்ள மலரை |
தலையில் சூடிக்கொள் |
அது மரணிக்கும் வரையிலும் |
மணந்துகொண்டே இருக்கும்! |
இதையே அடைந்து கொள்....!
அன்பான தோழியே |
நீ காதலிக்கு இருவரில் |
மணம் வீசும் மல்லிகையே |
உனக்கு பொருத்தம்...! |
ஏன் தெரியுமா.. அழகானவரை விட |
மனங்கொண்டவரே சிறந்தவர். |
அழகானவரை விட்டுவிட்டு |
மனம் உள்ளவரை மனந்துகொள் |
மனம் வீசும் மல்லிகையே |
உன் தலையில் சூடிக்கொள் |
தோழியே இதையே அடைந்து கொள் |
நீ வாழ்க்கையின் வசந்தத்தின் |
எல்லைக்கே சென்று விடுவாய்....! |
Sunday, September 26, 2010
நினைவுகள்....!
உள்ளத்தில் ஊற்றெடுத்த பாசமலரே |
உன் கனிந்த முகத்தை |
பார்க்க மனம் துடிக்குதடி |
உன் பெயரை உச்சரித்தால் |
உள்ளமெல்லாம் மகிழுதடி |
உடல் மட்டும் உன்னை விட்டு பிரிந்தாலும் |
உன் நினைவு |
என்னை விட்டு என்றும் நீங்காது! |
Tuesday, August 3, 2010
இதயத்தின் கீறல்கள்
வானமே நீயும் ஏனோ அழுகிறாய்
என் வாழ்வுதான் அவள்தந்த காதல்
காயங்களால் அழுதுவடிக்கிறது
உன்னையும் எந்தக்காதலி ஏமாற்றினால்
விரைந்து வா நீயும் நானும்
சேர்ந்தாவது இரவானால்
என் துாக்கத்தை துாரமாக்கியவளை
தேடிச்சென்று காதல் என்ற துாய்மையை
புரிய வைத்திடுவோம்!
என்னவளின் நினைவுகள்
தலையணையை ஈரமாக்குகின்றது
காதல்வேண்டும் என்றுதான் சொன்னது இதயம்
ஆனாலும் காதல் காயங்களை
ஏற்க்க முடியவில்லையே..!
பார்வைக்குள் தீ மூட்டினாய் அன்று
அதனால் இன்று
என் உருவத்தைக்கூட
நான் பார்க்கமுடியாத
ஊனப்பிறயைப்போல எனை ஆக்கிவிட்டாயே..!
என் வாழ்வுதான் அவள்தந்த காதல்
காயங்களால் அழுதுவடிக்கிறது
உன்னையும் எந்தக்காதலி ஏமாற்றினால்
விரைந்து வா நீயும் நானும்
சேர்ந்தாவது இரவானால்
என் துாக்கத்தை துாரமாக்கியவளை
தேடிச்சென்று காதல் என்ற துாய்மையை
புரிய வைத்திடுவோம்!
என்னவளின் நினைவுகள்
தலையணையை ஈரமாக்குகின்றது
காதல்வேண்டும் என்றுதான் சொன்னது இதயம்
ஆனாலும் காதல் காயங்களை
ஏற்க்க முடியவில்லையே..!
பார்வைக்குள் தீ மூட்டினாய் அன்று
அதனால் இன்று
என் உருவத்தைக்கூட
நான் பார்க்கமுடியாத
ஊனப்பிறயைப்போல எனை ஆக்கிவிட்டாயே..!
Sunday, August 1, 2010
உன் மடல் எனக்கோர் சொர்க்கம்
இடிபட்ட இதயத்துக்கோர்
இரத்தம் உன்மடல்
புன்பட்ட இந்த பு வாழ்வதற்கோர்
புத்துணர்ச்சி தருவது உன்மடல்
வேதனைகளால் வெந்துபோன
எனக்கோர் ஆறுதல் உன்மடல்
சோகம் என்றநோயினால்
துடிக்கும் எனக்கோர் மருத்துவம் உன்மடல்
மொத்தத்தில்
என் உயிர்
என் உடல்
என் சுவாசம்
எல்லாமே உன்மடல்தான்...!
இரத்தம் உன்மடல்
புன்பட்ட இந்த பு வாழ்வதற்கோர்
புத்துணர்ச்சி தருவது உன்மடல்
வேதனைகளால் வெந்துபோன
எனக்கோர் ஆறுதல் உன்மடல்
சோகம் என்றநோயினால்
துடிக்கும் எனக்கோர் மருத்துவம் உன்மடல்
மொத்தத்தில்
என் உயிர்
என் உடல்
என் சுவாசம்
எல்லாமே உன்மடல்தான்...!
Wednesday, July 21, 2010
தாய்க்கு.....
அன்புள்ள தாயே
ஆருயிர் நீயே.
இன்னல்கள் அடைந்தாய்
ஈடேற்றம் பெற்றாய்.
உலகில் நீ சுமந்த
ஊனங்கள் நான் அறிவேன்.
என்னை சுமந்த உனக்கு,
ஏழேழு ஜென்ம நன்றி உரைத்து
ஐயிரு மாதங்களக்கும்
ஒன்றிரண்டல்ல
ஓராயிரம் கடமைகள்
ஔவையான போதும் புரிவேன்.
அஃதே எனது வழி..
ஆருயிர் நீயே.
இன்னல்கள் அடைந்தாய்
ஈடேற்றம் பெற்றாய்.
உலகில் நீ சுமந்த
ஊனங்கள் நான் அறிவேன்.
என்னை சுமந்த உனக்கு,
ஏழேழு ஜென்ம நன்றி உரைத்து
ஐயிரு மாதங்களக்கும்
ஒன்றிரண்டல்ல
ஓராயிரம் கடமைகள்
ஔவையான போதும் புரிவேன்.
அஃதே எனது வழி..
Sunday, June 13, 2010
பள்ளிநாட்கள்
விட்டுச்சென்ற
பள்ளி நாட்களை
எண்னியென்னி
நித்தமும் விடுகின்ற
என் ஏக்கபெருமூச்சுகளை
மொத்தமாய் சேர்த்தெடுத்தால்
பெரும்புயலாய்மாரி
இந்நாடே அழிந்திருக்கும்.
ஆயிரம்வருடங்கள்
அழுதுதவமிருந்தாலும்
அந்த நாட்களில்
ஒரு நிமிடம் கூட
கிடைக்கப்போவதில்லை.
ஓய்வு நேரங்களில்லை
அரட்டைவாத்தைகளால்
அலங்கரித்த நாட்களவை
எங்கள் சோகங்களை
சொல்லிச்சொல்லி
பங்கிட்டுக்கொண்ட நாட்கள்.
பாடங்களுக்கு மட்டும்
கூடிய நாட்களல்ல
பாசங்களையும்
பரிமாரிக்கொண்ட
பன்பின நாட்களது.
பாடங்களுக்கு மட்டும்
பள்ளி நாட்களை
எண்னியென்னி
நித்தமும் விடுகின்ற
என் ஏக்கபெருமூச்சுகளை
மொத்தமாய் சேர்த்தெடுத்தால்
பெரும்புயலாய்மாரி
இந்நாடே அழிந்திருக்கும்.
ஆயிரம்வருடங்கள்
அழுதுதவமிருந்தாலும்
அந்த நாட்களில்
ஒரு நிமிடம் கூட
கிடைக்கப்போவதில்லை.
ஓய்வு நேரங்களில்லை
அரட்டைவாத்தைகளால்
அலங்கரித்த நாட்களவை
எங்கள் சோகங்களை
சொல்லிச்சொல்லி
பங்கிட்டுக்கொண்ட நாட்கள்.
பாடங்களுக்கு மட்டும்
கூடிய நாட்களல்ல
பாசங்களையும்
பரிமாரிக்கொண்ட
பன்பின நாட்களது.
பாடங்களுக்கு மட்டும்
செருப்பு
ஒரு சோடிக்கால்களுக்கு
பலசோடி செருப்புகளை
சேமித்த மனிதர்கள்
கால்கள் இல்லாத
மனிதர்களைசிந்தித்ததில்லை
அவசியம் தேவையானவை
செருப்பு அந்தஸ்தின் சின்னமானதால்
மனிதர்களைசுமக்கவேண்டிய செருப்பை
மனிதர்கள் சுமக்கின்றார்கள்
செருப்பு செல்வந்தர்களுக்கு செல்வாக்கு
வரியவர்களுக்கு கனவு
வியாபாரிகளுக்கு வருமானம்
பாராளுமன்றத்தின் ஆயுதம்
திருமணவீட்டில் குப்பை
பைத்தியகாரர்களுக்கு மாலை
பிச்சைக்காரர்களுக்கு தலையணை.
செருப்பு கால்களோடு மட்டும்
சம்பந்தப்பட்டதல்ல
மனித வாழ்க்கையோடு
சம்பந்தப்பட்டதும் கூட
மொத்ததில் செருப்பு
மனிதர்களைச்சுமக்கவில்லை
மனிதன் செருப்பை சுமக்கின்றான்.
பலசோடி செருப்புகளை
சேமித்த மனிதர்கள்
கால்கள் இல்லாத
மனிதர்களைசிந்தித்ததில்லை
அவசியம் தேவையானவை
செருப்பு அந்தஸ்தின் சின்னமானதால்
மனிதர்களைசுமக்கவேண்டிய செருப்பை
மனிதர்கள் சுமக்கின்றார்கள்
செருப்பு செல்வந்தர்களுக்கு செல்வாக்கு
வரியவர்களுக்கு கனவு
வியாபாரிகளுக்கு வருமானம்
பாராளுமன்றத்தின் ஆயுதம்
திருமணவீட்டில் குப்பை
பைத்தியகாரர்களுக்கு மாலை
பிச்சைக்காரர்களுக்கு தலையணை.
செருப்பு கால்களோடு மட்டும்
சம்பந்தப்பட்டதல்ல
மனித வாழ்க்கையோடு
சம்பந்தப்பட்டதும் கூட
மொத்ததில் செருப்பு
மனிதர்களைச்சுமக்கவில்லை
மனிதன் செருப்பை சுமக்கின்றான்.
Wednesday, June 9, 2010
திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா...(ரசித்தகவிதை)
கணவா...
திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா...
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!
சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்!
என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென
கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!
சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல...
மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!
பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனைபோல...
மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!
அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...
பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !
கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது
குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் !
மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்
கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...
அழுவதும்... அணைப்பதும்...
கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...
இடைகிள்ளி... நகை சொல்லி...
அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "
இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
எனை தீ தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்.... என் சவூதி கணவா!
கணவா... - எல்லாமே கனவா.......?
கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?
12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....
4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... ...
2 வருடமொருமுறை கணவன் ...
நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!
இது வரமா ..? சாபமா..?
அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்.... முகம் பூசுவோர் உண்டோ ?
கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?
நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்
நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்
திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து
வாழலாம்
விட்டுகொடுத்து... தொட்டு பிடித்து...
தேவை அறிந்து... சேவை புரிந்து...
உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...
தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...
வாரவிடுமுறையில் பிரியாணி... காசில்லா நேரத்தில் பட்டினி...
இப்படி காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம்
பரிமாறிக்கொள்ளவேண்டும்
இரண்டு மாதம்மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..
பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!
தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?
விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
பணத்தை தரும்... இலங்கை வங்கி ! பாசம் தருமா?
நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்
அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே
விட்டுவிட்டாயோ என் இதயத்தை?
பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி சவூதி சென்றாயே?
பாலையில் நீ வறண்டது என் வாழ்வு!
வாழ்க்கை பட்டமரமாய் போன... பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம் நின்று
எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!
உன் சவூதி தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?
விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்...
கிழித்துவிடு!
விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா! (இல்லையேல்
விவாக ரத்து செய்துவிட்டுப்போ )
திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து
வாழலாம்.....
(ரசித்த கவிதை ஈகரையிலிருந்து)
திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா...
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!
சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்!
என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென
கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!
சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல...
மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!
பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனைபோல...
மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!
அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...
பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !
கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது
குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் !
மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்
கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...
அழுவதும்... அணைப்பதும்...
கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...
இடைகிள்ளி... நகை சொல்லி...
அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "
இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
எனை தீ தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்.... என் சவூதி கணவா!
கணவா... - எல்லாமே கனவா.......?
கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?
12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....
4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... ...
2 வருடமொருமுறை கணவன் ...
நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!
இது வரமா ..? சாபமா..?
அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்.... முகம் பூசுவோர் உண்டோ ?
கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?
நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்
நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்
திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து
வாழலாம்
விட்டுகொடுத்து... தொட்டு பிடித்து...
தேவை அறிந்து... சேவை புரிந்து...
உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...
தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...
வாரவிடுமுறையில் பிரியாணி... காசில்லா நேரத்தில் பட்டினி...
இப்படி காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம்
பரிமாறிக்கொள்ளவேண்டும்
இரண்டு மாதம்மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..
பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!
தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?
விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
பணத்தை தரும்... இலங்கை வங்கி ! பாசம் தருமா?
நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்
அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே
விட்டுவிட்டாயோ என் இதயத்தை?
பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி சவூதி சென்றாயே?
பாலையில் நீ வறண்டது என் வாழ்வு!
வாழ்க்கை பட்டமரமாய் போன... பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம் நின்று
எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!
உன் சவூதி தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?
விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்...
கிழித்துவிடு!
விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா! (இல்லையேல்
விவாக ரத்து செய்துவிட்டுப்போ )
திரும்பி வந்துவிடு என் சவூதி கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து
வாழலாம்.....
(ரசித்த கவிதை ஈகரையிலிருந்து)
Monday, May 10, 2010
நட்பு
எல்லையற்ற வானுக்கும்
ஆழமற்ற கடலுக்கும்
ஒப்பான நட்பிலே
பொறாமையும் எரிச்சலும்
வெகு வெகு தூரம்
மானிடனுக்குள்ளும் மற்றுமின்றி
சக ஜீவனுக்குள்ளும்
போகின்ற பூ
இந்த வாடாத பூ நட்பு
இந்த நட்புக்குள்ளும் பூக்கும் பூ
அன்பு..! மன்னிப்பு...!
இயற்கைளும் பல நட்பு
கதிரவன் ஒளிகண்டு
நட்பிலே சிரித்து மலரும் கமலம்
மானிடனிலே பெரிதாய்
கானமுடிந்ததும் இந்த நட்பு…!
காதலையும் வெற்றி கொண்டது நட்பு
பேனா பிடித்தெழுதி படிக்கும் வரை
தொடக்கம் பொல்லூண்டி நடக்கும் வரை
கைகொடுப்பதும் இந்த நட்புத்தான்…!
காதல் கொண்ட உள்ளங்கள் பிரியலாம்
நட்புகொண்ட உள்ளங்கள்
பிரிவை நினைக்கக்கூடாது
கடல் கடந்து சென்றாலும் நட்பு
உள்ளத்தை விட்டுக்கடக்காது
உப்பில்லா பண்டம் குப்பைலே
நட்பில்லா நண்பனே
நடுத்தெருவிலே- இதை புரிந்திடடா
புத்தியுள்ள மனிதா....!
ஆழமற்ற கடலுக்கும்
ஒப்பான நட்பிலே
பொறாமையும் எரிச்சலும்
வெகு வெகு தூரம்
மானிடனுக்குள்ளும் மற்றுமின்றி
சக ஜீவனுக்குள்ளும்
போகின்ற பூ
இந்த வாடாத பூ நட்பு
இந்த நட்புக்குள்ளும் பூக்கும் பூ
அன்பு..! மன்னிப்பு...!
இயற்கைளும் பல நட்பு
கதிரவன் ஒளிகண்டு
நட்பிலே சிரித்து மலரும் கமலம்
மானிடனிலே பெரிதாய்
கானமுடிந்ததும் இந்த நட்பு…!
காதலையும் வெற்றி கொண்டது நட்பு
பேனா பிடித்தெழுதி படிக்கும் வரை
தொடக்கம் பொல்லூண்டி நடக்கும் வரை
கைகொடுப்பதும் இந்த நட்புத்தான்…!
காதல் கொண்ட உள்ளங்கள் பிரியலாம்
நட்புகொண்ட உள்ளங்கள்
பிரிவை நினைக்கக்கூடாது
கடல் கடந்து சென்றாலும் நட்பு
உள்ளத்தை விட்டுக்கடக்காது
உப்பில்லா பண்டம் குப்பைலே
நட்பில்லா நண்பனே
நடுத்தெருவிலே- இதை புரிந்திடடா
புத்தியுள்ள மனிதா....!
Sunday, May 9, 2010
Sunday, May 2, 2010
அது மட்டும்தான் நாம்
பண்பும் பணிவும்
நம்மை நல்லவனாக்கும்
அடக்கமும் ஒழுக்கமும்
நம்மை சிறந்தவனாக்கும்
உண்மையும் உழைப்பும்
நம்மை உயர்ந்தவனாக்கும்
ஆர்வமும் முயற்சியும்
நம்மை வெற்றியாலனாக்கும்
திறமையும் அறிவும்
நம்மை சாதனையாலனாக்கும்
ஆனால்
அன்பும் கருணையும்
நம்மை மனிதனாக்கும்....!
அன்புடன் சபீர்
நம்மை நல்லவனாக்கும்
அடக்கமும் ஒழுக்கமும்
நம்மை சிறந்தவனாக்கும்
உண்மையும் உழைப்பும்
நம்மை உயர்ந்தவனாக்கும்
ஆர்வமும் முயற்சியும்
நம்மை வெற்றியாலனாக்கும்
திறமையும் அறிவும்
நம்மை சாதனையாலனாக்கும்
ஆனால்
அன்பும் கருணையும்
நம்மை மனிதனாக்கும்....!
அன்புடன் சபீர்
Wednesday, April 28, 2010
உனக்காக மட்டும்.....SA
என் உணர்வில் என்றென்றும்
உன் நினைவே
என் உயிரில் என்றென்றும்
உன் உருவமே
என் விழிகளில் என்றென்றும்
உன் முகமே
என் உச்சரிப்பில் என்றென்றும்
உன் குரலே
என் மூச்சில் என்றென்றும்
உன் சுவாசமே
எத்தனை ஆயிரம் உறவுகள்
என்னுடனிருந்தும்
என் உயிர் தேடும்
ஒரே உறவாக
உன்னை மட்டுமே காண்கிறேன்
நான் என்றும் உன்னையே
நினைத்துக்கொண்டிருக்கிறேன்
உன்னை நினைபதற்க்காக மட்டுமே
நான் இன்றும் இருக்கிறேன்
இல்லை என்றால்
என்றோ இறந்திருப்பேன்...!
உன் நினைவே
என் உயிரில் என்றென்றும்
உன் உருவமே
என் விழிகளில் என்றென்றும்
உன் முகமே
என் உச்சரிப்பில் என்றென்றும்
உன் குரலே
என் மூச்சில் என்றென்றும்
உன் சுவாசமே
எத்தனை ஆயிரம் உறவுகள்
என்னுடனிருந்தும்
என் உயிர் தேடும்
ஒரே உறவாக
உன்னை மட்டுமே காண்கிறேன்
நான் என்றும் உன்னையே
நினைத்துக்கொண்டிருக்கிறேன்
உன்னை நினைபதற்க்காக மட்டுமே
நான் இன்றும் இருக்கிறேன்
இல்லை என்றால்
என்றோ இறந்திருப்பேன்...!
Sunday, April 25, 2010
Saturday, April 24, 2010
Friday, April 23, 2010
நீ வேண்டும்...!
இரவு நேரத்து பவுர்ணமி போல்
இதய தேசத்தில் நுழைந்தவளே...
ஒற்றை அன்றில் பறவை என்னை
உறவு கொடுத்து முழுமைபடுத்தியவளே...
வேஷங்கள் நிறைந்த இவ்வுலகில் எனக்கு
வெளிச்ச புள்ளியாய் வந்தவளே.
குழந்தையாய் மாறும் கடைசி காலங்களிலும்
கூடி நீ என்னோடு தவழ வேண்டும்
உன் வாய் ஒழுகும் சிறு உணவெடுத்து
உன்னோடு உண்டு நான் மகிழவேண்டும்...
இருப்பதெல்லாம் ஒன்றும் வேண்டாம்
இல்லையென்ற உன் அன்பு வேண்டும்.
என் வாழ்க்கை முடியும் வரை
என்னில் பாதியாய் இல்லை
எனக்குள் முழுமையாகவே நீ வேண்டும்...!
இதய தேசத்தில் நுழைந்தவளே...
ஒற்றை அன்றில் பறவை என்னை
உறவு கொடுத்து முழுமைபடுத்தியவளே...
வேஷங்கள் நிறைந்த இவ்வுலகில் எனக்கு
வெளிச்ச புள்ளியாய் வந்தவளே.
குழந்தையாய் மாறும் கடைசி காலங்களிலும்
கூடி நீ என்னோடு தவழ வேண்டும்
உன் வாய் ஒழுகும் சிறு உணவெடுத்து
உன்னோடு உண்டு நான் மகிழவேண்டும்...
இருப்பதெல்லாம் ஒன்றும் வேண்டாம்
இல்லையென்ற உன் அன்பு வேண்டும்.
என் வாழ்க்கை முடியும் வரை
என்னில் பாதியாய் இல்லை
எனக்குள் முழுமையாகவே நீ வேண்டும்...!
குளிர்........!
குளிர்........!
அது என்ன செய்து விடப் போகிறது..?
சுடுவதாக ஒரு போதும்
அது பொய் பேசியதில்லையே!
கதகதப்பாய்
தழுவுவதாகச் சொல்லி
யாரையும் ஏமாற்றியதுமில்லையே!
குளிர்......!
அது என்ன செய்து விடப் போகிறது..?
அது என்ன செய்து விடப் போகிறது..?
சுடுவதாக ஒரு போதும்
அது பொய் பேசியதில்லையே!
கதகதப்பாய்
தழுவுவதாகச் சொல்லி
யாரையும் ஏமாற்றியதுமில்லையே!
குளிர்......!
அது என்ன செய்து விடப் போகிறது..?
காதல்.....SA
வெகுநாட்கள் கழித்து
சந்திக்கும் கணத்தில்
நம் விழி பொங்கும் கண்ணீரில்
கப்பல்விடக் காத்திருக்கிறது
காதல்!
சந்திக்கும் கணத்தில்
நம் விழி பொங்கும் கண்ணீரில்
கப்பல்விடக் காத்திருக்கிறது
காதல்!
Thursday, April 22, 2010
மனித மனம்.....
மலருக்கு கோபம் வண்டுகள்
மலர்விட்டு மலர்தாவுகின்றனயென்று
வானத்துக்கு கோபம் மேகங்கள்
இடம் விட்டு இடம் மாறுகின்றனயென்று
ஆரறிவு படைத்த மனிதனே
மனம்விட்டு மனம் மாறுகையில்
பாவம்
மலர்களும் மேகம்களும்
என்னதான் செய்ய முடியும்...!
மலர்விட்டு மலர்தாவுகின்றனயென்று
வானத்துக்கு கோபம் மேகங்கள்
இடம் விட்டு இடம் மாறுகின்றனயென்று
ஆரறிவு படைத்த மனிதனே
மனம்விட்டு மனம் மாறுகையில்
பாவம்
மலர்களும் மேகம்களும்
என்னதான் செய்ய முடியும்...!
நினைவின் வலிகள்......sa
நினைவின் வலிகள்
நெஞ்சை கசக்க
நிழலின் நிறங்கள் தீயாய் ஒளிக்க
மனதின் விழிகள் கலங்கி தவிக்க
முடியுமோ உயிரே உன்னை மறக்க
நெஞ்சை கசக்க
நிழலின் நிறங்கள் தீயாய் ஒளிக்க
மனதின் விழிகள் கலங்கி தவிக்க
முடியுமோ உயிரே உன்னை மறக்க
உன் மூண்றெழுத்தில் என் மூச்சிருக்கும்.....SA
என்னவளே....
உன்னைக்கண்;ட நாளாய்
என்னாவி என்னில் இல்லையடி
உன் மூவெழுத்து நாமத்தில்
என் மூச்சுள்ளதென நானறிய
எத்தனை நாள்
நான் காத்திருக்கவேண்டும்
உன்னை ஓர் நிமிடம் காணாத
என் கண்களையே நான்
வெறுக்கின்றேன்
என்னைப்பார்த்து நீ சிரிக்கையிலே
ஒருகோடி இன்பமாய் நினைக்கிறேன
ஒருகனம் நீ என்னை
முந்திச்செல்லும் போது
என்னையே நான் இழக்கிறேன்
என்னவளே...
உன் புன்னகை மட்டும் போதும்
நான் பலகாலம் வாழ்ந்திடுவேன்
இவ்வையகத்தில் - அன்பே
நீ என்னுடைய முற்றத்தில் பூத்த
முதல் ரோஜாச்செடி
ஆதலால்தான் தினமும்
ஆனந்த கண்ணீராய்-தண்ணீர்
விடுகிறேன்-வாடாமலராய் நீ
தரிசனம் தருவாயா.....SA
உன்னைக்கண்;ட நாளாய்
என்னாவி என்னில் இல்லையடி
உன் மூவெழுத்து நாமத்தில்
என் மூச்சுள்ளதென நானறிய
எத்தனை நாள்
நான் காத்திருக்கவேண்டும்
உன்னை ஓர் நிமிடம் காணாத
என் கண்களையே நான்
வெறுக்கின்றேன்
என்னைப்பார்த்து நீ சிரிக்கையிலே
ஒருகோடி இன்பமாய் நினைக்கிறேன
ஒருகனம் நீ என்னை
முந்திச்செல்லும் போது
என்னையே நான் இழக்கிறேன்
என்னவளே...
உன் புன்னகை மட்டும் போதும்
நான் பலகாலம் வாழ்ந்திடுவேன்
இவ்வையகத்தில் - அன்பே
நீ என்னுடைய முற்றத்தில் பூத்த
முதல் ரோஜாச்செடி
ஆதலால்தான் தினமும்
ஆனந்த கண்ணீராய்-தண்ணீர்
விடுகிறேன்-வாடாமலராய் நீ
தரிசனம் தருவாயா.....SA
Tuesday, April 20, 2010
Monday, April 19, 2010
அழகு...
பூக்களின் அழகு உதிரும்வரை
பௌர்ணமியின் அழகு விடியும் வரை
சிலையின் அழகு உடையும் வரை
மழலையின் அழகு இளமை வரை
பாடலின் அழகு இனிமை வரை
பெண்மையின் அழகு தாய்மை வரை
உடலின் அழகு உயிர் பிரியும் வரை
அன்பின் அழகு இறுதி வரை
பௌர்ணமியின் அழகு விடியும் வரை
சிலையின் அழகு உடையும் வரை
மழலையின் அழகு இளமை வரை
பாடலின் அழகு இனிமை வரை
பெண்மையின் அழகு தாய்மை வரை
உடலின் அழகு உயிர் பிரியும் வரை
அன்பின் அழகு இறுதி வரை
Subscribe to:
Posts (Atom)